சென்னை, ஸ்ரீ வி பவர்ஸ் பயிற்சி பள்ளியில், அபாகஸ் பயின்று வந்த பத்து வயது மாணவன் வி. நீல்ராஜ் பிரஜித், தனது மின்னல் வேக மனக்கணக்கீடுகளால் புதிய உலக சாதனை படைத்தார். சென்னையில், தந்தை விஜய்பாபு தாய் பபிதா ஜெயந்தி இணையரின் மகன் நீல்ராஜ் பிரஜித், அபாகஸை, பயன்படுத்தி ஒரு நிமிடம் 19 வினாடிகளில் இரண்டு வரிசைகளின் 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை தீர்த்து புதிய உலக சாதனை படைத்தார். வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பில், தனது மின்னல் வேக கணக்கீடுகளின் மூலம் இந்த சாதனையை படைத்தார். நீல்ராஜின் இந்த சாதனையை அங்கீகரித்து, வேர்ல்ட் வைடு புக் ஆப் ரெக்கார்டு அமைப்பு உலக சாதனை சான்று வழங்கி கௌரவித்திருக்கிறது. சென்னையில் உள்ள ஶ்ரீ வி பவர்ஸ் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற சாதனை விருது வழங்கும் விழாவில், ஜீனியஸ் குழும மேலான் இயக்குனர் வைத்தியநாதன், மாணவன் நீல்ராஜ் அஜித்துக்கு, உலக சாதனை விருது வழங்கி, வாழ்த்தினார். மாணவன் நீல்ராஜ் பிரஜித் அவர்களின் சாதனையை, நண்பர்களும் பொதுமக்களும் பெரிதளவில் பாராட்டி வருகின்றனர். சாதனை மாணவன் நீல்ராஜ் பிரஜித், பேராவூரணி மின்வாரியத்துறை ஓய்வு அலுவலர் தங்கராஜ் நீலவேணி இணையரின் மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.