பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், உடைய நாடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளர் எம்.நீலகண்டன், மாவட்ட தென்னை வளர்ச்சி குழு தலைவர் லெ.க.இளங்கோ, வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி,சாசன செயலாளர் ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன் மற்றும் முன்னாள் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடைய நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டி. சோமு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக பேசி, மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். நிகழ்வில்,, முன்னாள் செயலாளர்கள் டிவி குமார், ருத்ரசிந்தாமணி பிரசிடென்ட் நடராஜன், முன்னாள் பொருளாளர் சபரி குமார், சங்கர் ஜவான், சங்கத்தின் உறுப்பினர்கள் முத்துவேல்,
ராமச்சந்திரன், ராமசாமி எல்ஐசி, பெரியசாமி, லட்சுமி மெடிக்கல் பாலமுருகன், புதிய உறுப்பினர் கணபதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு, அவரவர் வீட்டில் வளர்க்க முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்க்கும் மாணவருக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கி ஊக்கிவிக்கப்படுவர் என சங்க தலைவர் நா.ப.ரமேஷ் அறிவித்தார். முன்னதாக சங்க செயலாளர் ஜி.குமரன் வரவேற்புரை வழங்க, பொருளாளர் ஆவி.ரவி நன்றி கூறினார்.