பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடல்- மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.அழகேசன் துவக்கி வைத்தார்

IT TEAM
0

  



பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கம் சார்பில், பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடு விழா நடைபெற்றது. விழாவிற்கு, தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டு, விழாவை துவக்கி வைத்தார். விழாவில், வழக்குரைஞர்கள் எஸ்.வி சீனிவாசன், சிவேதி என் நடராஜன், ஆறு முத்துக்குமார் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், மாவட்ட இணை பொருளாளர் எம் நீலகண்டன், சாசன பொருளாளர் மைதீன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், முதல் நிலை தலைவர் ஜி.வி.ராஜ்குமார், மாவட்ட தென்னை வளர்ச்சி தலைவர் இளங்கோ, எல் சி எஃப் ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், முன்னாள் பொருளாளர்கள் சங்கர் ஜவான் மற்றும் சபரி குமார், பிஆர்ஓ முருகன், முன்னாள் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இறுதியாக சங்க செயலாளர் க. குமரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top