பேராவூரணியில், மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வின்சென்ட் ஜெயராஜ், செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் முருகேசன் ஆகியோருக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டியை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
அப்போது, திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் உடனிருந்தனர்.