பேராவூரணி, நவ 28
பேராவூரணியில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் பூமி பூஜை விழா நடந்தது.
ஸ்ரீ ஐயப்பன் கோயில் கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் புனரமைத்து புதிதாக கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று, புதிய திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பேராவூரணி ஸ்ரீ ஐயப்பன் கோயில் வளாகத்தில் பழைய கோயிலை அகற்றிவிட்டு புதிதாக 18 படியுடன் கூடிய ஸ்ரீ ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பிரமாண்டமான திருக்கோவில் கட்ட பூமி பூஜையை, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி ஜெயராமன் தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இதில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய பொதுச்செயலர் ராஜன்ஜி, தேசிய தலைவர் சேகர், அன்னதான கமிட்டி தேசிய தலைவர் கிருஷ்ணப்பாஜி, செயலர் கிருஷ்ணஅய்யா, தேசிய செயலர்கள் பிரபாகரன், டாக்டர் கணேசன், மாநில பொது செயலர்கள் பன்னீர்செல்வம், ஜெயராமன், மாநில செயலர்கள் சிவராஜ்குருசாமி, ஆதிகணேஷ், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் ஆறுமுகம், மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் ஜவகர்பாபு, கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில இணை பொதுச்செயலர் கமலாநீலகண்டன் செய்திருந்தார்.