பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லைன் சங்கம் சார்பில் பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். நிகழ்வில், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், சாசனப் பொருளாளர் மைதீன் பிச்சை, முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, செயலாளர் க.குமரன், முன்னாள் செயலாளர் டிவி குமார், முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம், வருங்கால பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு மரக்கன்றுகள் வீதம் 800 மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. மரக்கன்றுகளை சிறப்பாக பேணி பராமரித்து வளர்க்கும் மாணவர் ஒருவருக்கு, ரூபாய் 5000 சிறப்பு பரிசு வழங்கப்படும் என சங்க தலைவர் நா.ப.ரமேஷ் அறிவித்தார்.