தஞ்சாவூர், நவ.6 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஒன்றியப் பொறியாளர் பாரதிதாசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி ராஜ்குமார், இளைஞர் அணி தென்னங்குடி ராஜா, ஒப்பந்ததாரர் ராஜேந்திரன், கிராம பிரமுகர்கள் ரா.சி.கருப்பையன், வை.கோவிந்தன், ரா.மு.வைரவன், ஆர்.செல்லையன், ஏ.கே.பழனிவேல், வீரகோபால், எல்.வி.ஸ்டாலின், எல்.வி.அசோகன், ஏ.ஆர்.பழனிவேல், வி.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.