பேராவூரணியில் திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி பிறந்தநாள் விழா....
ஸ்டார் லயன் சங்கம் சார்பில் 2000 மரக்கன்றுகள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆவணம் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தராஜ்,
இரா.நீலகண்டன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில், சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாக அலுவலர் செ.ராமநாதன், பொருளாளர் தி.சாமியப்பன், லயன்ஸ் மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி, சித்திரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.