பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், வழிப்போக்கர்கள் ஐவருக்கு ஹெல்மெட் வழங்கி, சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ், செயலாளர் க.குமரன் மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர் விரியங்கோட்டை சிவ.தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின், இந்த சாலை விழிப்புணர்வு முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.