பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில், மாவட்ட லயன்ஸ் கிளப் ஆளுநர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பேராவூரணி ஆவணம் ரோட்டில் உள்ள செந்தில் மெடிக்கல் எதிர்ப்புறமும், ஆவணம் செல்லும் சாலையிலும், மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பாக அதற்கு கம்பி வலையும் வைத்தனர். நிகழ்ச்சியில், தலைவர் நா.ப.ரமேஷ், செயலாளர் க.குமரன், சாசனத்தலைவர் நீலகண்டன், வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், முன்னாள் செயலாளர்கள் குமார் டிவி, கோவிந்தன், முன்னாள் பொருளாளர்கள் பன்னீர்செல்வம், சங்கர் ஜவான், வருங்காலத் தலைவர் ராஜ்குமார், வருங்கால பொறுப்பாளர்கள் சுப.பெரியசாமி, பெருமாள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை சிறப்பித்தனர்.
மாவட்ட ஆளுநரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பேராவூரணியில் உள்ள முதியோர் இல்லத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் நா. ப. ரமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.