பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், லட்சுமி மெடிக்கல் பாலமுருகன் அவர்களின் முயற்சியில், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பங்களிப்போடு, ரெட்டவயலை சார்ந்த அய்யாதுரை என்கிற பயனாளிக்கு, ரூபாய் 11 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், சங்கத் தலைவர், செயலாளர் பொருளாளர், மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள், வருங்கால பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நீண்ட நாட்களாக காது கேளாமல் இருந்த பயனாளி, கருவி கிடைத்த மகிழ்ச்சியில், நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி கூறினார்.