பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக 100 தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் நான் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். பசிப்பிணி போக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.முகமது ரஃபி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், செயல் அலுவலர் ஆர்.ராஜா, மாவட்ட இணை பொருளாளர் எம்.நீலகண்டன், மாவட்ட தலைவர் அமல்.ஸ்டாலின் பீட்டர் பாபு, முன்னாள் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், சங்க செயலாளர் க.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில், சாசன பொருளாளர் மைதீன் பிச்சை, முன்னாள் பொருளாளர்கள் பன்னீர்செல்வம், முத்துக்குமார், முதல் நிலைத் தலைவர் ராஜ்குமார், முன்னாள் நிர்வாக அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில், பேராவூரணி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக சங்க பொருளாளர் ஆவி.ரவி நன்றி கூறினார்.