தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, பெருமகளூர் தலைமையாசிரியர் ஜோசப் சந்திரன் மற்றும் ஆசிரியை மெர்சி அருள் கிளாரா ஆகியோரின் மகன் அருள்மொழிவர்மன், தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பாங்காக் கிங் மாங்குட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், மெட்டீரியல் மற்றும் ப்ரொடக்சன் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி படிப்பு முடித்து வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தாய்லாந்து பல்கலைக்கழகம் வழங்கும், கல்வியாண்டின் இரண்டு இடத்திற்கான இந்த ஆராய்ச்சி படிப்பிற்கு, தேர்வு எழுதி, உலகளவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இருவரில் அருள்மொழிவர்மனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆராய்ச்சியினை, அனிமல் வேஸ்ட் பயோ ஃபில்லர் பாலிமர் பிரிவில் செய்து அதை வெற்றிகரமாக சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்று ஸ்காலர்ஷிப்போடு மாதாந்திர ஊக்கத் தொகையும் பெற்று இந்த ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்கிறார். முனைவர் அருள்மொழிவர்மனின் இந்த சாதனையை பேராவூரணி பகுதி ஆராய்ச்சியாளர்களும், கல்வியாளர்களும் நண்பர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பேராவூரணி பகுதி இளைஞர் அருள்மொழிவர்மன் தாய்லாந்து பாங்காக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்
ஜனவரி 12, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க