தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் செ.ராகவன்துரை தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி.அங்கயற்கண்ணி, திருமதி.கலாராணி, அலுவலக கண்காணிப்பாளர் திரு.செங்குட்டுவன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திரு.கோகுலகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, டைரி, அரசாணை புத்தகம் மற்றும் காலண்டர் வழங்கி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வட்டாரச் செயலாளர் சி. லட்சுமணசாமி மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்