தஞ்சாவூர், ஜன.24 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்காடு கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, செந்தலைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம்,
மல்லிப்பட்டினம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 49.25 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் கணினி அறை கட்டிடம், இடையாத்தி கோனார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பூவாளூர் ஊராட்சி நெய்வவிடுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9.41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கட்டடம் என ரூ.1 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வுகளில், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன்,
கோ.இளங்கோவன்,
வை.ரவிச்சந்திரன், மு.கி.முத்துமாணிக்கம்,
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத்,
பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகா், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் அ.மூர்த்தி, , வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, எம்.கே.ராமமூர்த்தி, பேராவூரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.