மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் குருகுலம் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், அலஞ்சிரங்காடு குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ குழு சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமில் 131 நபர்கள் கலந்து கொண்டனர். 20 நபர்கள் மேல் சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் க.சிவனேசன் தலைமையிலான தலைமையாசிரியர், ஆசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.