சேதுபாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி, மணக்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி.விஜயகுமார், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் வீரக்குடி ராசா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஞானசம்பந்தம், ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முருகேசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் வழக்கறிஞர் வீ. கருப்பையா, கபிலன், ஆத்மநாதன் ஆசிரியர், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.