ஆதனூர் இளைஞர் நற்பணி மன்றம், இளந்தமிழன் பாய்ஸ் மற்றும் கிராமத்தார்கள் இணைந்து நடத்திய 11 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆண்கள் சைக்கிள் ரேஸ், பெரிய மாடு கைப்புறா, சிறிய மாடு கைப்புறா, பெண்கள் சைக்கிள் ரேஸ், ஆண்கள் மாரத்தான் பெண்கள் மாரத்தான், பானை உடைத்தல் போன்ற ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் ஆதனூர் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை, ஆதனூர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் இளந்தமிழன் பாய்ஸ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.