பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி உடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் இராமநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இலஞ்சியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு, ஊராட்சி செயலாளர் கணேசன், பாஸ்கர், பழனிச்சாமி, ராஜதுரை, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ரஷ்யா, இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் அபிநயா, மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பாட்டுப் போட்டி,பேச்சுப்போட்டி, மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பாக தலைவர் பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி நன்றி கூறினார்.