பேராவூரணி பேரூராட்சியில் புகையில்லா போகி எனும் சிறப்பு முன்னெடுப்பை செயல்படுத்தி இருக்கிறார்கள். தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் எனவும் அதை தூய்மை பணியாளர்களிடம் கொடுங்கள் எனவும் அதிலும், டயர்கள், பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் கண்ணாடி பொருட்கள் என தனித்தனியாக பிரித்து தருவது குறித்து விழிப்புணர்வு ஸ்டால்களை பேராவூரணி பகுதியில் நிறுவி, விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள். பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோரின் இந்த சிறப்பு முன்னெடுப்பை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.