பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில், ஏசிஇ டிரஸ்ட் சார்பில், பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சங்கத் தலைவர் என்.இராமநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் விஸ்வ.இராம்குமார் வரவேற்றார். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன், பேராவூரணி மருத்துவர் துரை.நீலகண்டன், அழகப்பா கல்விக் குழும சட்ட ஆலோசகர் எம்.ஜி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஓய்வு பெற்ற ஏடிஜிபி வி.வனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் சி.திலீபன், சென்னை ஸோகோ கார்ப்பரேஷன் சைபர் செக்யூரிட்டி தலைமைப் பொறியாளர் எஸ்.சசிகுமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். மேலும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாநில அளவில் உயர்கல்வி விளையாட்டு மற்றும் இதர துறைகளில சாதனை படைத்தவர்களை பாராட்டி ரொக்கப் பணம் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் 80 பேருக்கு சுமார் 4 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
இதில், சங்கத் துணைத் தலைவர் எம்.நீலகண்டன், பொருளாளர் வி.ராமமூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இணை செயலாளர் பி.முத்து விஜயாள் நன்றி கூறினார்..