பேராவூரணி, ஜன 10
பேராவூரணி நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
நீதிபதி அழகேசன் தலைமை வகித்தார். நீதிமன்றத்தில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். தொடர்ந்து பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு அரசு உதவி வக்கீல் பாண்டியராஜன், வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன், வக்கீல்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வக்கீல்கள், அலுவலர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.