பேராவூரணி தாலுகா ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியில் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி கிறிஸ்டினா தலைமை வகித்தார். நிகழ்வில், பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி மேரி லிட்வினா, ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி, ஆதனூர் புனித அன்னாள் இல்ல சுப்பீரியர் அருட்சகோதரி சத்தியா, புனித அன்னாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி அமலசவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலஞ்சிராங்காடு குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அவர் தமது சிறப்புரையில், "பெற்றோர்கள் மாணவர்களோடு நேரம் செலவிட்டு, தம் பிள்ளைகளை கொண்டாட வேண்டும். அதன் மூலம் நம் குழந்தைகள் உற்சாகம் பெற்று, நல்வழியில் செல்வர்" என்றார். விழாவில், புனல்வாசல் சகோதரிகள் இல்ல சுப்பீரியர் அருட்சகோதரி ஜோஸ்மின், புனல்வாசல் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி கரோலின், ஆதனூர் கவுன்சிலர் காரல் மார்க்ஸ், கவுன்சிலர்கள் சுமதி நீலகண்டன், மு.த.முகிலன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் அருள் சின்னப்பா, கிராம மேல்மட்ட குழுத் தலைவர் அருள்நாயகம், கிராமத் தலைவர் மான்சிங், பொருளாளர் அன்பானந்தம், பட்டிமன்ற நடுவர் ஆசிரியர் தாமரைச்செல்வன், ஆர்சி சபை செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, ஓய்வு எஸ்ஐ இருதயராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் சியாமளாதேவி, ஜெயா மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். விழாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆசிரியர் தாமரைச்செல்வன் ரொக்க பரிசுகளை வழங்கி, வாழ்த்தினார். இறுதியாக ஆசிரியர் மெர்சி நன்றி கூறினார்.