பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 12 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இப்பயிற்சிக்கு
பேராவூரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தார் வட்டார கல்வி அலுவலர்கள் அங்கையற்கன்னி ,கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தானர் பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார்.இப்பயிற்சியில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் பயிற்ச்சியில் ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த பயிற்சி நடைபெற்றது இப்பயிற்ச்சிக்கு வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள்,ஆசிரியர் பயிறுநர், குழந்தகள் பாதுகாப்பு துறையிலிருந்து செண்பகமலர் மற்றும் வழக்கறிஞர் ஏகாம்பரம் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர் இறுதியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதாபானு நன்றி கூறினார்.பயிற்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய ஆசிரியர் பயிறுநர் செய்திருந்தார்