பேராவூரணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு நல இளைஞர் சங்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு நல இளைஞர் சங்க மாநிலத் தலைவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குழ.செ.அருள் நம்பி, திராவிட கழக மாவட்ட செயலாளர் சிதம்பரம், ஐயப்ப சேவா சங்க மாநில பொறுப்பாளர் கமலா நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், காவிரி கோச்சிங் சென்டர் கௌதமன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் குமரன், துரை.குமரன், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, வர்த்தக சங்க பொருளாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.