தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில், பெரியார் குறித்து அவதூறு கருத்தை பரப்பிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பேராவூரணி ஒன்றிய செயலாளர் மருத. உதயகுமார் புகார் மனு அளித்தார். உடன்,
மாவட்ட அமைப்பாளர் தோழர் சித. திருவேங்கடம், நகர அமைப்பாளர் தோழர் தா. கலைச்செல்வன், தமிழக மக்கள் புரட்சி கழககொள்கைபரப்பச்செயலாளர் தோழர் ஆறு. நீலகண்டன், இளைஞரணி செயலாளர் தோழர் பைங்கால் மதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர் மூர்த்தி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் தோழர் அப்துல் சலாம், நகர பொறுப்பாளர் தோழர் அப்துல்லா, அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ், விசிக நகர செயலாளர் தோழர் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.