பேராவூரணி தாலுக்கா, ஊமத்தநாடு ஊராட்சியில், 2020 முதல் 2024 வரை மக்கள் பணி செய்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, ஊராட்சி பணியாளர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் மதிவாணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஊமத்தநாடு ஊராட்சி மன்ற தலைவர் குலாம் கனி, துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, வன்மீகநாதன் வரவேற்புரையாற்ற, ஊராட்சி செயலாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.