கணினி பேராசிரியராக பணியை தொடங்கி, தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாளராக பணியாற்றி வருகிற முனைவர் இரா. அகிலன், தமிழ்நாடு அரசு வழங்கிய இந்த ஆண்டுக்கான கணினி தமிழறிஞர் விருதை பெற்று இருக்கிறார்.
கணினி தமிழ் குறித்த பல்வேறு கருத்தரங்கங்களில் தனது ஆய்வு உரையை வழங்கி இருக்கிறார். பல்வேறு கருத்தரங்குகளில் கருத்தாளராக திறம்பட பணிபுரிந்து இருக்கிறார். தமிழக அரசின் விருது பெற்ற முனைவர் அகிலன் அவர்களை பேராவூரணி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.