பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மகாலட்சுமி சதீஷ்குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) செ.ராகவன்துரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், ஆசிரியர் கே வி கிருஷ்ணன்,
பள்ளியின் ஆசிரியர்கள்
மெர்சி ஏஞ்சலா, சுரேந்தர், பாலா தேவி, செல்வராணி
மற்றும் ரோட்டரி கிளப் நண்பர்கள், பெற்றோர்கள் என திரளாக பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) செ.ராகவன்துரை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் சுரேந்தர் நன்றி கூறினார்.