பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும் விரியன்கோட்டை ராஜராஜன் பள்ளியும் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா. விழாவில் சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ், பொருளாளர் ஆவி.ரவி, சங்கத்தின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், வருங்கால பொறுப்பாளர்கள் பிரதிஷ், ஜி.குமரேசன், பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். விழாவில் பள்ளி குழந்தைகள் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காண்பித்தனர். பாரம்பரிய முறைப்படி பொங்கல் இட்டு, இயற்கைக்கு படைத்து வழிபாடு செய்யப்பட்டது.