பட்டுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வ.மதியழகன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, டைரி, அரசாணை புத்தகம் மற்றும் காலண்டர் வழங்கியதோடு, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ராகவன் துரை, மாவட்ட தலைவர் அருள், மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்ட மாநில/ மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வட்டாரங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.