பேராவூரணி, பிப்.2 -
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தளபதி விஜய் நல்லாசியுடன், கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.பி.முல்லைவேந்தன், இளைஞர் அணி செயலாளர் ஏ.விஜய் கார்த்திக் தலைமையில், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெளிவயல், மல்லிப்பட்டினம், சொக்கநாதபுரம், புக்கரம்பை, பூவாணம் ஆகிய இடங்களில் கழகக் கொடியேற்றி, இனிப்பும், ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை நகர இளைஞரணி தலைவர் தா.சுதாகர் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி கழக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.