தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்கா கழனி வாசலில் வருகிற சனிக்கிழமை மார்ச் 01- ம் தேதி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற இருக்கிறது. நிகழ்வில் பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, புதுப்பூட்டு குதிரை ஆகிய போட்டிகள் நடைபெற இருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற இருக்கிறது. அதில் வெற்றி பெறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அஇஅதிமுக சேதுவாசத்திரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அஸ்வினி என்.எம்.பார்த்திபன் செய்து வருகிறார். மேலும் விழா தொடர்பான விவரங்களுக்கு 99423 87259, 99654 66885 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்..