தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

IT TEAM
0

 


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்ட கிளையின் சார்பில் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திரு அருள் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் செ.ராகவன்துரை வரவேற்புரை ஆற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


இக்கூட்டத்தில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப்பு பொதுச் செயலாளராகவும், டெல்லியில் உள்ள பவன் டிரஸ்ட் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள ந.ரெங்கராஜன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


 மற்றும் எதிர்வரும் டிட்டோஜாக் சார்பில் நடைபெறவிருக்கின்ற போராட்டங்களை சிறப்பாக தஞ்சை மாவட்ட கிளையின் சார்பில் முன்னெடுத்து நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இறுதியில் மாவட்ட பொருளாளர் ந. நாகராஜன் நன்றியுடன் ஆற்றினார் இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை பேராவூரணி மதுக்கூர் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top