தஞ்சாவூர், பிப்.27 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், ஓட்டங்காடு ஊராட்சி, பெரிய தெற்குக்காடு முதல் மேல ஓட்டங்காடு வரை இணைப்புச் சாலை, ஓரடுக்கு கப்பிச்சாலையாக
அமைக்கும் பணி ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது.
இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், திமுக இளைஞரணி பிரவீன் ஆனந்த், கிளைச் செயலாளர் சந்திரசேகர், விஜயகுமார், ரெகுநாதன், சுரேஷ், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நண்பர்கள் குழு தலைவர் ஓய்வு கேப்டன் ஆசீர்வாதம் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.