பேராவூரணி, பிப்.3 -
பேராவூரணியில் திமுக சார்பில், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சேதுசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் திமுக அவைத்தலைவர் சுபசேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், மு.கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், சுற்றுச் சூழல் அணி மாநில துணைச்செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ், நிர்வாகிகள் முத்துவேல், ஞானப்பிரகாசம், இளைஞர் அணி அப்பு, பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து நிலை, சார்பு அணிகளின் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.