தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்திடக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவிற்கு இணங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்திடக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.அருள் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ச.துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ.பாஸ்கர் முன்னிலை வசித்தனர்.
மாவட்டச் செயலாளர் செ.ராகவன்துரை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை பேராவூரணி மதுக்கூர் திருவிடைமருதூர் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ந.நாகராஜன் நன்றி கூறினார்.