தஞ்சாவூர், பிப்.7 -
பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பேராவூரணி புதுக்கோட்டை சாலையில் உள்ள நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்திக் கொள்ளலாம் என பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பேராவூரணி பேரூராட்சியில் பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையை ஏற்று நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சடலத்தை எரியூட்ட கட்டணமாக ரூபாய் 3,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பேராவூரணி புதுக்கோட்டை சாலையில் உள்ள நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்திக் கொள்ளலாம்
நவீன எரிவாயு தகன மேடையை சென்னை மோஷ்த்வாரா அறக்கட்டளை பராமரித்து வருகிறது. மேலும், இது குறித்து விவரங்கள் அறிய, 9597188039, 7904161493, 9789888713 ஆகிய அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.