பேராவூரணி, மார்ச் 24
பேராவூரணி ஸ்ரீ விநாயகா திருமண மஹாலில், லயன்ஸ் கிளப், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கிளப் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.பி.ராஜேந்திரன் வரவேற்றார். தாசில்தார் சுப்பிரமணியன், ஸ்ரீவிநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சந்திரமோகன் ஆகியோர் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் குழு கண் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இதில், 564 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், 224 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் கிளப் வட்டாரத் தலைவர் சிவநாதன், நிர்வாகிகள் எஸ்.கே.ராமமூர்த்தி, இ.வி.காந்தி, தமிழ்செல்வன், வைரவன், கே.கே. டி.சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், சுப்பையன், நல்லாசிரியர் மனோகரன், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளர் இளையராஜா நன்றி கூறினார்.