பேராவூரணி நகர வீதிகளில் உள்ள வேகத்தடைகளில் இருந்த கருப்பு வெள்ளை வர்ணம் மங்கி போயிருந்த நிலையில், வேகத்தடை தெரியாதபடியும், அதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருந்து வந்தது. இதனை வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதன் அடிப்படையில் இன்று கருப்பு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு, பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் மற்றும் சமூக ஆர்வலர் சதீஷ்குமார் ஆகியோரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.