பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல்படி நமது கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு l, ll சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆத்தாளுரில் (24.03.25) திங்கட்கிழமை அன்று துவங்கிய சிறப்பு முகாமின் நிறைவு நாளான இன்று (30/3/2025) கல்லூரி முதல்வர் முனைவர் இரா திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அலகு l, முனைவர் சி.இராணி, இணைப்பேராசிரியர், அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முருகேசன் கவுன்சிலர் சிறப்புரை ஆற்றினார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இந்திராணி வாழ்த்துரை வழங்கினார். ஏழு நாட்களுக்கான அறிக்கையினை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் அலகு ll இணைப்பேராசிரியர் முனைவர் ர. ராஜ்மோகன் வாசித்தார். பின்பு அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் ராஜேஷ் கணினி அறிவியல் துறை, முனைவர் சதீஷ்குமார் ஆங்கிலத் துறை, பபிதா தமிழ்த்துறை மற்றும் நூற்றிற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.