பேராவூரணி லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, பேராவூரணி ஸ்ரீ விநாயக திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது. முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தையின் கண் நோய் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.