தஞ்சாவூர், மார்ச்.6 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பேராசிரியர் க.அன்பழகன் நினைவு தினத்தையொட்டி பேராவூரணி, சேதுசாலை அண்ணாசிலை அருகில், அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படத்திற்கு, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், மு.கி.முத்துமாணிக்கம், நகரச் செயலாளர் என்.எஸ். சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், விவசாய அணி அமைப்பாளர் குழ.செ.அருள்நம்பி, அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், இளைஞர் அணி அப்பு என்ற பிரவின் ஆனந்த், மூத்த முன்னோடி அச்சகம் கோ.நீலகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், கவுன்சிலர்கள் மு.த.முகிலன், ரம்யா அரவிந்தன், ஆர்.கே.ராஜேந்திரன், பழனிவேல் சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.