தஞ்சாவூர், மார்ச்.22 -
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி பேரூர் திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் சனிக்கிழமை பேராவூரணி எஸ்.என்.வி திருமண மண்டபத்தில், நகர அவைத் தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா.அசோக்குமார், தொகுதி பார்வையாளர் சுப.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியக்கழகச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர் (பேராவூரணி), மாரிமுத்து (பெருமகளூர்), பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன், மீனவரணி மாநில துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, தகவல் தொழில்நுட்ப அணி கற்பகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூர் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மோர், ஜூஸ், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.
அதேபோல், திமுக ஐ.டி.விங்க் சார்பில், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கப்பட்டது.