பேராவூரணி தாலுக்கா ஆதனூர் புனித அன்னை வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினர் ஏற்பாடு செய்யும் 49 ஆம் ஆண்டு அன்பின் விருந்து விழா இன்று மாலை ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற இருக்கிறது. நிகழ்வுக்கு, ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு கே.எம்.ஆரோக்கியசாமி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து, மாபெரும் அன்னதான நிகழ்வு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை, குழுவின் கௌரவத் தலைவர் ஆ.இருதயராஜ், தலைவர் ஏ.ராபின்சன், துணைத் தலைவர் எஸ்.ஆனந்தராஜ், செயலாளர் எஸ்.மரிய சவரிநாதன், துணைச் செயலாளர் செ.ஆனந்தராஜ் மற்றும் பொருளாளர் ஐ.மெசியா ஆகியோர் செய்து வருகின்றனர்.