கூப்புளிக்காடு ஸ்ரீ மன்மத சுவாமி உயிர் எழுப்பும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற தொலைக்காட்சி புகழ் கோவி.தாமரைச்செல்வன் தலைமையில் மாபெரும் இன்னிசை பட்டிமன்றம்

IT TEAM
0

 


பேராவூரணி தாலுக்கா, கூப்புளிக்காடு ஸ்ரீ மன்மத சுவாமி உயிர் எழுப்பும் விழாவை முன்னிட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடு நண்பர்களால், மாபெரும் இன்னிசை பட்டிமன்றம் நடத்தப்பட்டது. முன்னதாக, பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பூத்தட்டு எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ ரதி மன்மத சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பட்டிமன்ற மற்றும் தொலைக்காட்சி புகழ் கோவி. தாமரைச்செல்வன் தலைமையில், சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது செல்போனும் தொலைக்காட்சியுமா?, மதுவும் மகளிர் குழுவுமா? எனும் தலைப்பிலான இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. தனது நகைச்சுவை பேச்சால் வழக்கம்போல பொதுமக்களை கட்டிப்போடும், பட்டிமன்றம் நடுவர் கோவி.தாமரைச்செல்வன் அவர்களின் பட்டிமன்றத்தை ரசிக்க ஏராளமானோர் திரண்டு வந்தனர். நகைச்சுவை கலந்த இன்னிசை பட்டிமன்றத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரிதும் ரசித்து பார்த்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்கள், இளைஞர்கள் ரதி மன்மத சுவாமி குரூப்ஸ், அய்யனார் குரூப்ஸ் நண்பர்கள் மற்றும் கூப்புளிக்காடு கிராமத்தினர் செய்திருந்தார்கள்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top