பேராவூரணி, மார்ச் 6
பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில் தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவர்களின், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் செயல்முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டன. பஞ்சகவ்யம், மீன் அமினோ அமிலம், வேப்பங்கொட்டை சாறு, ஐந்திலை கரைசல், மண்புழு உரம், பசுந்தாள் உரம் போன்ற இயற்கை உரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் தெளிவாக விளக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கி எடுத்து கூறினர். கிராம இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் திருச்சிற்றம்பலம் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் கவிதா, கல்லூரி மாணவர்கள் பிரசன்னவெங்கடேஷ், ராஜா, ராமகிருஷ்ணன், ராகுல், ரிஷிகேஷ், ரித்திஷ்குமார், சபரிநாதன், சயீத்யாஸீன், சாரதி, சந்தோஷ், ஜீவபாரதி, விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.