பேராவூரணி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் பழைய பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கம்

IT TEAM
0

 


 தஞ்சாவூர், மார்ச்.8 - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், பேராவூரணி- பட்டுக்கோட்டை வழி ஒட்டங்காடு பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் வழித்தடத்தில் தடம் எண் - ஏ 39 ஏ பழைய நகரப் பேருந்துக்கு பதிலாக, மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து துவக்க விழா சனிக்கிழமை காலை பேராவூரணி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எஸ்.ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், மாநில மீனவரணி துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், மாரிமுத்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் காமராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகப்பன், மாவட்டப் பிரதிநிதி மெய்யநாதன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கழனிவாசல் ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், கலந்து கொண்டனர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top