பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைச்சாமி தலைமை தாங்கினார்.
ஆயக்காரன்புலம் Dr.சிவக்கண்ணு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் N.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Life with Gratitude என்ற தலைப்பில் நன்றி உணர்வைப் பற்றியும் வாழ்வியல் நெறிகளைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில், கணிதத்துறை தலைவர்(பொ) முனைவர் சி.இராணி வாழ்த்துரை வழங்கினார்.
பேராசிரியர் மோகனசுந்தரம் வரவேற்புரை நல்கினார்.
பேராசிரியைகள் ஜெ.சுவேதா நன்றியுரையும் பா.நிவேதிதா நிகழ்ச்சி தொகுத்தும்
விழா ஏற்பாடுகளை பேராசிரியர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.