பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார் தலைமை வகித்தார். நிகழ்வில், திருச்சியில் நடைபெற்ற உலக சாதனைக்கான சிலம்பப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மெடல்களும், தாய்மண் பாலம் அமைப்பு மற்றும் கெய்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில், கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ராஜா, அகாடமி தலைவர் முனைவர் வேத. கரம்சந்த் காந்தி, அகாடமி செயலாளர் ஆசிரியர் அ.காஜாமுகைதீன், அகாடமியின் பெற்றோர் சங்க தலைவர் பேபி ராபிகா, தொழில்முனைவர் அ. சந்தோஷ், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மார்ச் 09, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க